/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2024 01:27 AM
ஈரோடு, செப். 20-
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி., - செவிலியர்கள் உட்பட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும், 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை அலுவலகம் உட்பட, 13 அலுவலகங்கள் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்படி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் தலைமை வகித்தார்.
* நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் ரகு, வட்ட செயலாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தனர்.
* பவானி அருகே சூரியம்பாளையம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன், மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. டாஸ்மாக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகையா தலைமை வகித்தார்.