/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
/
லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
ADDED : டிச 16, 2024 04:07 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் தனசேகரன். இவர் நில பட்டாவுக்கு, பெயர் மாற்றம் செய்து தர, ௧௫ ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, பள்ளபாளையம் 'அ' கிராம நிர்வாக அலு-வலர் சரத்குமார், பெருந்துறை மண்டல துணை தாசில்தார்
நல்லசாமி ஆகியோர், கையும் களவுமாக, லஞ்ச ஒழிப்பு போலீசா-ரிடம் சிக்கினர்.
இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதானவர்கள், 48 மணி நேரத்துக்கு பிறகு சஸ்பெண்ட் செய்யப்படுவர். இதன்படி பெருந்துறை மண்டல துணை தாசில்தாரான நல்லசாமியை, மாவட்ட வருவாய் அலு-வலர் சாந்தகுமார் சஸ்பெண்ட் செய்தார். பள்ளப்பாளையம் வி.ஏ.ஓ., சரத்குமாரை, ஈரோடு ஆர்.டி.ஓ., ரவி, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கூறினர்.