அகோரிகளுடன் வாழ்வை தொடர ஆதார் பெற முடியாத விரக்தி ஈரோடு சாமியார் தீக்குளிக்க முயற்சி
அகோரிகளுடன் வாழ்வை தொடர ஆதார் பெற முடியாத விரக்தி ஈரோடு சாமியார் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 28, 2026 05:27 AM

ஈரோடு; ஈரோடு கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நேற்று காலை, சாமியார் ஒருவர் தன் மீது மண்-ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து, பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஈரோடு பெரியார் நகர் பொய்யேரிக்கரை முருகன், 56, என தெரிந்தது. தினக்கூலி வேலை செய்து கொண்டு, குடும்பத்துடன் வசித்தார். 15 ஆண்டுக்கு முன் காசிக்கு சென்று, அகோரிகளுடன் வாழ்க்கையை தொடர்ந்துள்ளார். அகோரிகளுடன் வாழ, ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டை தேவை என்பதால், ஓராண்டுக்கு முன் ஈரோடு வந்-துள்ளார். இவர் காசி சென்ற பின், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆங்காங்கு வாழ சென்றதால், இவரிடம் பிறந்த தேதி, இருப்பிடம், உறவினர் விபரம் எதுவுமின்றி ஆதார் பெற முடியாமல் தவித்து வந்தார்.இந்நிலையில் நேற்று தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது. வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் பொய்யேரிக்க-ரையில் வசித்தற்கான ஆதாரம் உள்ளதை பெற்று, ஆதார் பெற்றுத்தர முயல்வதாக கூறினர். இதை-யடுத்து போலீசார் எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர்.
