/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் கோவிலில் உண்டியல் திறப்பு பக்தர்கள் ரூ.11.56 லட்சம் காணிக்கை

ADDED : டிச 19, 2024 01:26 AM
கோபி, டிச. 19-
பாரியூர், கொண்டத்துக்
காளியம்மன் வகையறா கோவில்களின், 10 உண்டியல்கள் திறந்ததில், 11.56 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
கோபி அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோவில்களின், 10 உண்டியல்கள், அறநிலையத்துறை உதவி கமிஷனர் அருள்குமார், செயல் அலுவலர் அனிதா, இன்ஸ்பெக்டர் சங்கர கோமதி ஆகியோர் தலைமையில், நேற்று காலை திறக்கப்பட்டது. தனியார் கல்லுாரி மாணவியர், நுகர்வோர் அமைப்பு மூலம், காணிக்கை கணக்கீடு செய்யும் பணி நேற்று மாலை 5:00 மணிக்கு முடிந்தது. மொத்தம் தங்கம், 50 கிராம், வெள்ளி, 214 கிராம், அமெரிக்கா டாலர், 37, சிங்கப்பூர் டாலர், 50, ஐரோப்பா கரன்சியாக, 20 யூரோவில் ஒரு நோட்டு என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தவிர, 11.56 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கைகள் அனைத்தும், கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், பாரியூர் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் வரவு வைக்கவுள்ளனர். இதற்கு முன் கடந்த ஜூலை 25ல், உண்டியல்கள் திறந்ததில், 13.36 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக, அறநிலையத்
துறையினர் தெரிவித்தனர்.