/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வைகாசி விசாக விழாவால் படையெடுத்த பக்தர்கள் மாவட்டத்தில் களை கட்டிய முருகன் கோவில்கள்
/
வைகாசி விசாக விழாவால் படையெடுத்த பக்தர்கள் மாவட்டத்தில் களை கட்டிய முருகன் கோவில்கள்
வைகாசி விசாக விழாவால் படையெடுத்த பக்தர்கள் மாவட்டத்தில் களை கட்டிய முருகன் கோவில்கள்
வைகாசி விசாக விழாவால் படையெடுத்த பக்தர்கள் மாவட்டத்தில் களை கட்டிய முருகன் கோவில்கள்
ADDED : ஜூன் 10, 2025 01:09 AM
ஈரோடு, வைகாசி விசாக திருவிழாவையொட்டி, படையெடுத்த பக்தர்களால், முருகன் கோவில்கள் களை கட்டின.
முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம், முருகன் கோவில்களில் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஈரோடு அருகே திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள் பாலித்தார்.
வெள்ளோட்டில்...
இதேபோல், 300 ஆண்டு பழமை வாய்ந்த வெள்ளோடு பால சுப்பிரமணியசுவாமி கோவிலில், திருவிளக்கு வழிபாட்டுடன் விழா நேற்று துவங்கியது. பல்வேறு வழிபாடுகளை தொடர்ந்து பால சுப்பிரமணியருக்கு மந்திர வேள்வி நடந்தது. தொடர்ந்து, 16 வகை திரவிய அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்கார பேரொளி வழிபாடு நடந்தது.
* புன்செய் புளியம்பட்டி சுப்பிரமணியர் கோவிலில், மூலவர் சுப்பிரமணியர் மற்றும் உற்சவர் வள்ளி - தெய்வானை சமேத முருகனுக்கு, பல்வேறு திரவிய அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து உற்சவர் சுப்பிரமணியர் மயில் வாகன சப்பரத்தில் வீதியுலா நடந்தது.
* கோபி பச்சைமலை முருகன் கோவிலில், லட்சார்ச்சனை, சத்ரு சம்ஹார ேஹாமம் கடந்த, 6ல் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, 108 குடம் பால் ஊற்றி, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது.
அதையடுத்து மாம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிேஷகம் நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், மகன்யாச அபி ேஷகம், திருக்கல்யாண உற்சவம், மகா தீபாராதனை நடந்தது.
வைகாசி விசாகத்தை ஒட்டி, கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுத்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் மாநகர், மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள் நேற்று களை கட்டின.