/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புரட்டாசி முதல் சனி வழிபாடு அமோகம் பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுப்பு
/
புரட்டாசி முதல் சனி வழிபாடு அமோகம் பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுப்பு
புரட்டாசி முதல் சனி வழிபாடு அமோகம் பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுப்பு
புரட்டாசி முதல் சனி வழிபாடு அமோகம் பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுப்பு
ADDED : செப் 22, 2024 04:01 AM
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலுக்கு, அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்துாரி அரங்கநாதர் காட்சியளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* புன்செய்புளியம்பட்டியை அடுத்த கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில், சுவாமிக்கு மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையில், சுவாமிக்கு தங்க காப்பு அணிவிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள், தாசர்களுக்கு அரிசி படி வழங்கி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கப்பட்ட அரிசி, பருப்பு மற்றும் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை, தாசர்களுக்கு தானமாக கொடுத்தனர். உற்சவர் திம்மராய பெருமாள் குதிரை வாகனத்தில் உள்பிரகாரத்தில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதேபோல் புன்செய்புளியம்பட்டி அருகே கோவில்புதுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாளுக்கு அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் கோபி ஈஸ்வரன் கோவில் வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.
* அந்தியூர் பேட்டைபெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-நிருபர் குழு-