/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சோழீஸ்வரர் கோவிலில் லிங்கத்துக்கு தீர்த்தாபிஷேகம் செய்த பக்தர்கள்
/
சோழீஸ்வரர் கோவிலில் லிங்கத்துக்கு தீர்த்தாபிஷேகம் செய்த பக்தர்கள்
சோழீஸ்வரர் கோவிலில் லிங்கத்துக்கு தீர்த்தாபிஷேகம் செய்த பக்தர்கள்
சோழீஸ்வரர் கோவிலில் லிங்கத்துக்கு தீர்த்தாபிஷேகம் செய்த பக்தர்கள்
ADDED : ஜூலை 18, 2025 02:02 AM
ஈரோடு, ஈரோடு காவிரிக்கரையில் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி மாத பிறப்பான நேற்று, கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வில்வேஸ்வரர், புஷ்பநாயகிக்கு, 1,008 லிட்டர் தீர்த்தாபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து, சுவாமி சிலைகளுக்கு தாங்களே ஊற்றி வழிபட்டனர். இதையடுத்து சுவாமிக்கு, 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது.
சோழீஸ்வரர் கோவிலில் ஆடி மாத முதல் நாள் மற்றும் சித்திரை மாத முதல் நாளில் மட்டும், பக்தர்களே சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி வழிபட அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன், கள்ளுக்கடைமேடு பத்ர காளியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவில் என மாநகரில் அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி பிறப்பு சிறப்பு வழிபாடு களை கட்டியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.