/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்
/
பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்
பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்
பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED : செப் 04, 2025 01:56 AM
டி.என்.பாளையம், டி.என். பாளையம் அருகே, கணக்கம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி
பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.இதை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின், பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களில் புண்ணிய நதிநீரை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து சென்றனர். இன்று அதிகாலை 5:30 மணிக்கு திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி நிகழ்ச்சி, 6:00 மணிக்கு மங்கள இசை, துவார பூஜை நடைபெற உள்ளது. 8:00 முதல் 8:30 மணிக்குள் கோபுர கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்படுகிறது.