/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : செப் 29, 2024 01:10 AM
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஈரோடு, செப். 29-
புன்செய்புளியம்பட்டி அருகே, கீழ் முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில், நேற்று புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை விழா நடந்தது.
சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேக பூஜை செய்யப்பட்டன. உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருட வாகனத்தில் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள், தங்கள் விளை நிலங்களில் விளைந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை, கோவில் வளாகத்தில் தாசர்களுக்கு படையலிட்டனர்.
பின் தாசர்களிடம் இருந்து சிறிதளவு காய்கறி, அரிசி, பருப்பு வகைகளை மடியேந்தி பெற்றனர். புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் வளாகத்தில் வேணு கானம் கலைக்குழுவின் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
* கோபி அருகே, பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் நேற்று காலை, 5:30 மணிக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் நடந்தது. ஈஸ்வரன் கோவில் வீதி வரதராஜப்பெருமாள் கோவில், குள்ளம்பாளையம் வரதராஜபெருமாள் கோவில்களிலும் பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
* கள்ளிப்பட்டி அருகே பெருமுகையில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், நேற்று சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சஞ்சீவிராய பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம் திருமஞ்சனமும், மாலை திருக்கோடி தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
* ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையுடன், ஏகாதசியும் சேர்ந்ததால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. கோவில் முன்புற பகுதியில், வாகன போக்குவரத்தை நிறுத்தி மாற்று பாதையில் செல்ல டவுன் போலீசார் வழிவகை செய்தனர். ஏராளமான பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்துாரி அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* அந்தியூர், பேட்டை பெருமாள் கோவிலில் பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், கிருஷ்ணாபுரம் கரைபொருமாள் கோவில், கைகாட்டி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.