/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 02, 2025 01:24 AM
ஈரோடு, ஜன. 2-
ஈரோட்டில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று பல்வேறு கோவில்களில் பக்தர் கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. மாநகராட்சி வளாகத்தில் உள்ள, வலம்புரி விநாயகருக்கு தங்ககாப்பு அலங்காரம், ரயில்வே காலனி சித்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம், ஆஞ்சநேயருக்கு வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
* சென்னிமலை, முருகன் கோவிலில் உள்ள மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வள்ளி,தெய்வானை, தன்னாசியப்பன், பின்னாக்கு சித்தர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
* சென்னிமலை, ஆதித்ய நகரில் உள்ள ஓம் நர்மதாம்பிகை உடனமர் ஓம் நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில், அபிஷேக ஆராதனை நடந்தது.
* பெருந்துறை, ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்டரமண பெருமாள் கோவில், ஸ்ரீவேதநாயகி உடனமர் சோளீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல், கோட்டை வீர ஆஞ்ச நேயர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில், பெத்தாம்பாளையம் ரோடு ஸ்ரீதேவி பூதேவி சமேத கரியபெருமாள் கோவில், காஞ்சிக்கோவில் சீதேவிஅம்மன் கோவில், தங்கமேடு தம்பிகலைஅய்யன் கோவில்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* அம்மாபேட்டை, காவிரி ஆற்றங்கரையில் உள்ள சொக்கநாதர் கோவிலில், சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.
* சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில், புத்தாண்டு என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனை தரிசனம் செய்ய, போக்கு
வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
* புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார், கரிவரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், ஊத்துக்குழி அம்மன், ஐயப்பன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவை சாலையிலுள்ள, அந்தோணியார் சர்ச், சி.எஸ்.ஐ., பெந்தகொஸ்தே, டி.ஈ.எல்.சி,சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தன.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பேட்டை பெருமாள் கோவில், செல்லீஸ்வரர் கோவில், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரியம்மன், அழகு முத்துமாரியம்மன், கைகாட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், கோபி சாரதா மாரியம்மன், கெட்டிச்செவியூர் தான்தோன்றியம்மன் கோவில், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில், கோபி வேலுமணி நகர் சக்தி விநாயகர் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கொடுமுடி, மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலையம்மன், எல்லை பகவதியம் மன், ஓம்காளியம்மன் மற்றும் தன்னாசியப்பன் கோவில்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.