/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2026 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதுகலை ஆசிரியர் ஊதிய முரண்-பாட்டை களைய வேண்டும். மேல்நிலை கல்விக்கு தனி இயக்கு-னரகம் உருவாக்க வேண்டும்.
உயர் கல்விக்கான ஊக்க ஊதி-யத்தை மீண்டும் வழங்க வேண்டும். பள்ளி கல்வித்துறையுடன் பிற நல பள்ளிகளை இணக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

