/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் வாக்குறுதியால் ஏமாற்றம்; மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்
/
முதல்வர் வாக்குறுதியால் ஏமாற்றம்; மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்
முதல்வர் வாக்குறுதியால் ஏமாற்றம்; மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்
முதல்வர் வாக்குறுதியால் ஏமாற்றம்; மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்
ADDED : டிச 05, 2025 10:04 AM

ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் செந்தில்நாதன் தலை-மையில், ஈரோடு தாலுகா அலுவலக வளா-கத்தில் ஆர்ப்பாட்டம் செய்து, திருமகன் ஈவெரா சாலையில், நேற்று மறியலில் ஈடுபட முயன்-றனர். மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலர் விஜயமனோகரன், ராக்கிமுத்து, கவுரி-சங்கர், சுமதி உட்பட பலர் பேசினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்க-ளுக்கு அமலாக்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்-களை நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணி செய்யும் ஊழிர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதி-யக்குழு நிதி பலன்களை அரசின் உயர் அதிகா-ரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு, போராடிய லட்-சக்கணக்கான ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்-காத, 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க அலுவலக பணி நேரத்துக்கு பின்பும், விடுமுறை தினங்களில் ஆய்வு கூட்டம், பிற மீட்டிங் நடத்தக்கூடாது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக முதல்வர் வாக்குறுதிய-ளித்து, நிறைவேற்றப்படாமல் ஏமாற்றம் அடைந்-துள்ளோம், எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 105 பேரை போலீசார் கைது செய்தனர்.

