/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளை கொன்ற தந்தைக்கு மீண்டும் சிறை
/
மகளை கொன்ற தந்தைக்கு மீண்டும் சிறை
ADDED : டிச 05, 2025 10:05 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பா-ளையம் ஊராட்சி, இந்திரா நகர் மேற்கு வீதியை சேர்ந்தவர் குமார், 40; கூலி தொழிலாளி. இவரின் மகள் தனுஷியா, 7; கருத்து வேறுபாட்டால் மனைவி அம்பிகா கணவரை பிரிந்து, 2014ம் ஆண்டு முதல் பெற்றோர் வீட்டில் உள்ளார். தனது பராமரிப்பில் இருந்த மகளை, 2014 ஜூன், 10ம் தேதி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். பங்களாப்புதுார் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2015 ஆக., மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்-கப்பட்டார். நான்கரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதில் ஈரோடு நீதிமன்ற உத்தரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. குமாரை போலீசார் மீண்டும் கைது செய்து, கோவை சிறையில் மீண்டும் அடைத்தனர்.
'மனைவியும் கறுப்பு; குமாரும் கறுப்பு. இந்நிலையில் தனு-ஷியா சிவப்பாக பிறந்ததால், மனைவி மீது குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இத-னால்தான் அவரை பிரியவும் நேரிட்டுள்ளது. அதன் பிறகும் திருந்தாமல், மகளையும் கொன்று தீராத பழிக்கு ஆளாகி, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்' என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

