/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வண்டிப்பாதை அகற்றத்தால் தகராறு: எஸ்.பி.,யிடம் மனு
/
வண்டிப்பாதை அகற்றத்தால் தகராறு: எஸ்.பி.,யிடம் மனு
ADDED : செப் 21, 2024 07:13 AM
ஈரோடு: பவானிசாகர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், இவர் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விறகு அறுக்கும் வேலைக்கு ஆட்-களை வைத்து, குத்தகை ஒப்பந்தம் பெற்று மரம், வேலி, முட்செ-டிகள் அகற்றம், கருவேல மரம் அறுக்கும் வேலை செய்து வரு-கிறேன். கடந்த, 17ல் மல்லியம்பட்டியை சேர்ந்த சுந்தரராஜன், வண்டிப்பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற ஆட்களை அழைத்து வரும்படி கூறினார்.
அதன்படி ஜே.சி.பி., இயந்திரம், ஆட்களுடன் சென்று வண்டிப்-பாதையில் வளர்ந்திருந்த செடி, முட்செடி, புதர்களை அகற்-றினேன். அப்போது அதே
பகுதியை சேர்ந்த சில தோட்டக்கா-ரர்கள், 'என்னை தகாத வார்த்தை பேசி ஜாதியை கூறி திட்டினர்'. இதுபற்றி புன்செய் புளியம்பட்டி போலீசில்
புகார் செய்தும், வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.