/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட கலை திருவிழா :போட்டி இன்று துவக்கம்
/
மாவட்ட கலை திருவிழா :போட்டி இன்று துவக்கம்
ADDED : நவ 03, 2025 02:03 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பள்ளி அளவில், வட்டார அளவில் கலை திருவிழா போட்டி கடந்த சில மாதங்களாக நடந்தது. பேச்சு, கட்டுரை, நடிப்பு, ஓவியம் வரைதல், குழு நடனம், தனி நபர் நடனம், கிராமிய இசை, இசை கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் திறனை வெளிப்படுத்தினர்.
பள்ளி, வட்டார அளவிலான போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி துவங்கி நடக்க உள்ளது. வட்டார அளவில் வெற்றி பெற்றவர்கள் இவற்றில் பங்கேற்பர்.
இதுபற்றி பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது:இன்றும், நாளையும் பெருந்துறை நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்கு நடக்கிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றும், நாளையும் அந்தியூர் ஐடியல் பள்ளியில் நடக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, கோபி பாரதி வித்யாலயாவில் வரும், 6, 7ல் நடக்கிறது. இதேபோல், 9, 10ம் வகுப்புக்கு 6, 7ல் பெருந்துறை நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
இவ்வாறு கூறினர்.

