/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சின்னாறு அணை மீன்பிடி ஏலம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
/
சின்னாறு அணை மீன்பிடி ஏலம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
சின்னாறு அணை மீன்பிடி ஏலம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
சின்னாறு அணை மீன்பிடி ஏலம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ADDED : ஜூலை 29, 2025 01:44 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, சின்னாறு அணை மீன் பிடி ஏலம் நடக்க உள்ளது. இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
சூளகிரி சின்னாறு அணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணையை அடுத்த, 5 ஆண்டுக்கு மீன் பிடி ஏலம் விடுவதற்கான அறிவிப்பை, சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் கடந்த, 23ம் தேதி வெளியிட்டார். ஏலம் தொடர்பான அறிவிப்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை, http://www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். இணையவழி ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், ஒப்பந்தப்புள்ளி உள்ளிட்ட அனைத்து படிவங்களையும், இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
இணையவழி மூலமாக வரும், 6ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் ஒப்பந்தபுள்ளிகளை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது, கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.