/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒவ்வொரு தேர்தலிலும் துரோகங்களால் வீழ்ச்சி மாவட்ட தி.மு.க., நிர்வாகி விரக்தி
/
ஒவ்வொரு தேர்தலிலும் துரோகங்களால் வீழ்ச்சி மாவட்ட தி.மு.க., நிர்வாகி விரக்தி
ஒவ்வொரு தேர்தலிலும் துரோகங்களால் வீழ்ச்சி மாவட்ட தி.மு.க., நிர்வாகி விரக்தி
ஒவ்வொரு தேர்தலிலும் துரோகங்களால் வீழ்ச்சி மாவட்ட தி.மு.க., நிர்வாகி விரக்தி
ADDED : ஜன 13, 2025 02:56 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லபொன்னி, குறிஞ்சி சிவகுமார் போன்றோர் சீட்டை பெற முயன்றனர்.
இதில் சந்திரகுமார், செந்தில்குமார் முன்னிலையில் இருந்தனர். மாற்று கட்சியான தே.மு.தி.க.,வில் இருந்த வந்த சந்-திரகுமாருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், செந்தில்குமார் விரக்தி அடைந்தார். இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் போட்டியிட முயன்றபோது ஏற்பட்ட 'துரோக வலியால்' இனி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்வதில்லை என முகநுாலில் பதிவிட்டேன். தற்-போதும் போட்டியிட விரும்பாமல் அமைதியாக இருந்தேன். தி.மு.க., நிர்வாகிகள், நண்பர்கள், 'அவசியம் கேள்' என்றதும் சராசரி மனிதனாய் பதவி சபலத்தில் முயற்சித்தேன்.
நீண்ட நாட்களாக கழகப்பணி ஆற்றினாலும், ஈரோடு தொகுதி பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர், மாற்று கட்சியில் இருந்து வரும் வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஒதுக்கப்படுவதால், என்னை போன்றவர்களின் பெயர் பரிசீலனைக்கே எடுப்படு-தில்லை. ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவதில்லை. 'எடுப்பார் கைப்பிள்ளையாக நான் இருக்க மாட்டேன்' என்று பயந்த சிலர், எனக்கு வரும் வாய்ப்பை தட்டி விட்டனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் சில துரோகங்களால் நான் வீழ்த்தப்படுகிறேன். இவ்வாறு தெரிவித்-துள்ளார்.