ADDED : ஆக 21, 2026 05:44 AM
சென்னிமலை:ஈரோடு
மாவட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான கபடி
சாம்பியன்ஷிப் போட்டி, கோபியில் இரு நாட்கள் நடந்தது. இதில்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 120 அணிகள் பங்கேற்றன. ஈரோடு
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், துணை காவல்
கண்காணிப்பாளர் சீனிவாசன் போட்டியை துவக்கி வைத்தனர்.
மாவட்ட
நீதிபதி (ஓய்வு) ஸ்ரீதரன், கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர்
தங்கராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் திவ்ய நாகேஸ்வரி மற்றும் வருவாய்
வட்டாட்சியர் (ஓய்வு) ரவிச்சந்திரன் போட்டியை பார்வையிட்டு
வீரர்களை ஊக்குவித்தனர்.
ஆண்கள் பிரிவில் பி.மேட்டுப்பாளையம்
டைமண்ட் ஸ்டார் அணி முதலிடம் பிடித்து, 30,000 ரூபாய் பரிசுடன் வெற்றிக்
கோப்பையை கைப்பற்றியது. இரண்டாமிடத்தை கே.எம்.கே., குட்டை
முனியப்பன் கோவில் அணி பிடித்து, 20,000 ரூபாய்; ஜி.எல்., ஸ்போர்ட்ஸ்
கிளப் மற்றும் ஏ.எம்.கே.சி., கோபி அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது
இடங்களை பிடித்து தலா, 10,000 ரூபாய் பரிசுத்தொகை பெற்றன.
பெண்கள்
பிரிவில் சத்தி பிரதர்ஸ், அந்தியூர் அணி முதலிடத்தை பெற்று தலா, 15,000
ரூபாய்; பி.கே.ஆர்., கல்லுாரி அணி இரண்டாமிடம், எஸ்.வி.,ஸ்போர்ட்ஸ்,
தலவுமலை மற்றும் பாரதி ஸ்போர்ட்ஸ் அகாடமி, சென்னிமலை அணிகள்
மூன்றாவது மற்றும் நான்காம் இடங்களை பிடித்து, ரொக்கப்பரிசை வென்றன.
35
வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் நாகராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப்,
அரச்சலுார் அணி முதலிடத்தை பிடித்தது. செல்வராஜ் நினைவு
சத்தியமங்கலம் அணி இரண்டாமிடம்; செவன் லைன்ஸ் நாத கவுண்டம்பாளையம்
அணி மூன்றாமிடம், கரிகாலன் கபடி குழு நான்காமிடத்தை பிடித்தது.
