ADDED : ஆக 21, 2026 05:43 AM
ஈரோடு:தமிழ்நாடு
தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு
சார்பில், ஈரோடு வட்டார கல்வி அலுவலகம் முன் நேற்று மாலை கவன ஈர்ப்பு
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்க பள்ளி
ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் விக்டர்
செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.
தேர்தல்
வாக்குறுதிபடி பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு
சட்டத்தை இயற்ற வேண்டும். கற்பித்தல் அல்லாத இதர பணிகளில் ஆசியர்கள்
பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20
அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
