sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி வரத்துடன் விலையும் சரிந்த மஞ்சள்

/

தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி வரத்துடன் விலையும் சரிந்த மஞ்சள்

தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி வரத்துடன் விலையும் சரிந்த மஞ்சள்

தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி வரத்துடன் விலையும் சரிந்த மஞ்சள்


ADDED : நவ 05, 2024 06:36 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. வழக்கமான ஏல நாட்களில், 3,000 முதல், 5,500 மூட்டை வரும். சீசன் காலங்களில் கூடுதலாக, 1,000 மூட்டை வரத்தாகும். தீபாவளிக்கு முன்பாக கடந்த, 29ல் நடந்த ஏலத்-துக்கு, 2,146 மூட்டைகள் வரத்தாகி, 934 மூட்டைகள் விற்பனை-யானது. இதை தொடர்ந்து, 30, 31, நவ., 1, 2, 3 என ஐந்து நாட்கள் ஏலத்துக்கு விடுமுறை விடப்பட்டு, நேற்று ஏலம் மீண்டும் நடந்தது.

இதில் கோபி மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு, மஞ்சள் வரத்தாகவில்லை. ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 112 மூட்டை, ஈரோடு வேளாண் உற்பத்தி-யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு, 103 மூட்டை என, 215 மூட்டை வரத்தானது. இதில், 165 மூட்டை விற்பனையானது. ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் - 12,520 ரூபாய் முதல், 13,224 ரூபாய்; கிழங்கு, 12,489 ரூபாய் முதல், 12,709 ரூபாய் வரை விற்பனையானது.ஈரோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்-துக்கு குவிண்டால் விரலி மஞ்சள், 10,609 ரூபாய் முதல், 13,269 ரூபாய்; கிழங்கு மஞ்சள், 9,899 ரூபாய் முதல், 10,342 ரூபாய் வரை விற்றது. மஞ்சள் வரத்து குறைந்ததுடன், வியாபாரிகள் குறைவாக வந்ததாலும், குவிண்டாலுக்கு, 1,000 ரூபாய் வரை விலை குறைந்து விட்டதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us