/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு 'மெகா' விருந்து ஈரோட்டில் 4 அமைச்சர்கள் பங்கேற்பு
/
தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு 'மெகா' விருந்து ஈரோட்டில் 4 அமைச்சர்கள் பங்கேற்பு
தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு 'மெகா' விருந்து ஈரோட்டில் 4 அமைச்சர்கள் பங்கேற்பு
தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு 'மெகா' விருந்து ஈரோட்டில் 4 அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 21, 2025 06:45 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பூத் வாரியான பொறுப்பாளர், உறுப்பினர்கள் நியமன கூட்டம், ஈரோடு அருகே மேட்டுக்க-டையில் நேற்று நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து-சாமி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம் வரவேற்றார். அமைச்சர்கள் நேரு, வேலு, செந்தில்பா-லாஜி முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கினர்.
கிழக்கு சட்டசபை தொகுதியில் உள்ள, 237 ஓட்டுச்சாவடிக்கும், தலா ஒரு நிர்வாகி, அவர்களுக்கு கீழ் எட்டு உறுப்பினர் என, 10 பேர் கொண்ட குழு அமைத்தனர். இவ்வாறு, 237 ஓட்டுச்சாவ-டிக்கும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் இன்று முதல், அவர்களுக்கான ஓட்டுச்சாவடி பகு-திக்கு சென்று, ஒவ்வொரு வீடாக வாக்காளர் விபரத்தை உறுதி செய்ய வேண்டும். உள்ளூர், வெளியூரில் உள்ள வாக்காளர்களை உறுதி செய்து, அவர்களை
வரவழைத்து ஓட்டுப்பதிவுக்கு தயார் செய்ய வேண்டும். தி.மு.க., கூட்டணி சார்ந்த வாக்காளர் விப-ரத்தை தனியாகவும், அ.தி.மு.க., - பா.ஜ., - நா.த.க., போன்ற கட்சி சார்புடையவர்கள் விபரத்தை தனியாக சேகரித்து,
தி.மு.க.,வுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி வாரியாக இதுபோன்ற விபரத்தை முழுமையாக பெற்று, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த வேண்டும். அதன்படி தி.மு.க.,வுக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகும், பதிவா-காது, ஓட்டுப்போடவே வரமாட்டார்கள்
என்ற விபரத்தை ஒரு வாரத்துக்குள் மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும். இது-போன்ற பணியை தொடர்ந்து செய்வதுடன், தி.மு.க., திட்டங்-களை கூறி, பிப்., 3 மாலை வரை செயல்பட யோசனை தெரிவித்-துள்ளனர்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி வாரியாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைவருக்கும் 'மெகா விருந்து' வழங்கப்பட்டது.

