/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சர் வீட்டின் அருகில் தொடங்கிய தி.மு.க., பிரசாரம்
/
அமைச்சர் வீட்டின் அருகில் தொடங்கிய தி.மு.க., பிரசாரம்
அமைச்சர் வீட்டின் அருகில் தொடங்கிய தி.மு.க., பிரசாரம்
அமைச்சர் வீட்டின் அருகில் தொடங்கிய தி.மு.க., பிரசாரம்
ADDED : ஜன 15, 2025 12:30 AM
ஈரோடு,:
ஈரோட்டில் தி.மு.க.,வின் இடைத்தேர்தல் பிரசாரம், அமைச்சர் வீட்டின் அருகில் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, ஈரோடு பெரியார் நகரில் உள்ள, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வீட்டருகே, பிரசாரத்தை நேற்று தொடங்கினர். பெரியார் நகரில் வீட்டு வீடாக ஓட்டு சேகரித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு வழங்கிய திட்ட பயன்களால், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட மக்கள் விரும்புகின்றனர்.
கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் முழுமையாக நிறைவேற்றி உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்களை சாதாரணமாக பார்க்கவில்லை. போட்டியாகவே பார்த்து பணி செய்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அமைச்சருடன் வேட்பாளர் சந்திரகுமார், எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்.பி., கந்தசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.