/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்
/
ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்
ADDED : டிச 02, 2024 03:04 AM
டி.என்.பாளையம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டியில், ரேக்ளா பந்தயம் மற்றும் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
இதில் தி.மு.க., நெசவாளரணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர். பந்தயம் தொடங்கி வைக்கப்-பட்ட நிலையில், ஒரு குதிரை ரேக்ளா வண்டி பாய்ந்து சென்ற-போது, சிந்து ரவிச்சந்திரன் மீது உரசியது. இதில் முகம், வயிறு பகுதியில் அடிபட்ட நிலையில் நிலைதடுமாறி விழுந்து மயக்கம-டைந்தார். கட்சியினர் அவரை மீட்டு கோபி தனியார் மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவர் நலமுடன் இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.