/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., தொழிற்சங்க தேர்தலால் ஈரோடு மாவட்டத்தில் அரசு பஸ் சேவை பாதிப்பு

ADDED : அக் 08, 2024 03:45 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 110 அரசு பஸ்கள் இயங்காததால், பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
அரசு போக்குவரத்து கழக தி.மு.க., தொழிற்சங்கமான எல்.பி.எப்., மண்டல நிர்வாகிகள் தேர்தல், அந்தந்த கிளைகளில் இன்று நடக்கிறது. இதனால் ஐந்து நாட்களுக்கும் மேலாக எல்.பி.எப்., தொழிற்சங்க உறுப்பினர்கள், தேர்தலில் போட்டி-யிடும் பிரமுகர்களால் கவனிக்கப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு காசிபாளையம் டெப்போ மெக்கானிக்குகள் பலர், சங்க பிரசார வேலைக்கு சென்றதால், நேற்று முன் தினம் இரவு பஸ்களின் பராமரிப்பு பணி கேள்விக்குறியானது. ஈரோடு மண்டலத்தில் அரசு போக்குவரத்துக்கு, 13 கிளைகள் உள்ளன. இவற்றில் நேற்று மட்டும், 110 பஸ்கள் இயக்கப்படவில்லை. இதில், 70 பஸ்கள் வெளியூர் செல்பவை. இவை எல்.பி.எப்., தொழிற்சங்க நிர்வாகிகளால் இயக்கப்படுபவை. அதேசமயம் மாற்று தொழிற்-சங்க உறுப்பினர்கள் பஸ்களை இயக்கி வருகின்றனர். இன்று தேர்தல் நடப்பதால் மேலும் பல பஸ்கள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. 10ம் தேதி வரை சங்க தேர்தல் நடப்பதால், முழுமை-யான அரசு பஸ் போக்குவரத்து சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் நேற்று பஸ் சேவை குறைந்ததால், பயணிகள் அவ-திக்கு ஆளாகினர்.