/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெளிநாட்டு உணவுகள் தேவையா? உணவு கையாளுனர் பயிற்சியில் பேச்சு
/
வெளிநாட்டு உணவுகள் தேவையா? உணவு கையாளுனர் பயிற்சியில் பேச்சு
வெளிநாட்டு உணவுகள் தேவையா? உணவு கையாளுனர் பயிற்சியில் பேச்சு
வெளிநாட்டு உணவுகள் தேவையா? உணவு கையாளுனர் பயிற்சியில் பேச்சு
ADDED : ஜூலை 27, 2025 01:22 AM
ஈரோடு :ஈரோட்டில், உணவு பாதுகாப்பு துறை, ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் சார்பில் உணவு கையாளுனர் பயிற்சி துவங்கியது. சங்க தலைவர் கந்தசாமி வரவேற்றார். ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி முன்னிலை வகித்தார். கலெக்டர் கந்தசாமி, பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், 15,000க்கும் மேற்பட்ட உணவு தயாரிப்பு நிறுவனங்கள், கடைகள் செயல்படுகின்றன. எனவே உணவு கையாளுனர் பயிற்சி பெறுவோருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. உணவு தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற வேண்டும். நமது உடலுக்கு, நமது நாட்டில் என்ன கிடைக்குமோ அந்த உணவை தயாரித்து உட்கொள்ளுங்கள்.
சீனா, இத்தாலி, ஜப்பான் நாட்டு உணவுகளை தேடி வாங்கி உண்பது நமக்கு ஏற்புடையதாகாது. வீடுகளில் சமைக்கும், தயாரிக்கும் உணவு போல தரமாக இருக்க வேண்டும். இங்கு பயிற்சி நிறைவில் வழங்கப்படும் சான்று, இரு ஆண்டுகளுக்கானது. தொடர்ந்து தரமான உணவு தயாரிப்புக்கு பயிற்சி பெறுங்கள். இவ்வாறு பேசினார்.