/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்
/
மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்
மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்
மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்
ADDED : ஆக 28, 2025 02:00 AM
அந்தியூர், 8
வரட்டுப்பள்ளம் அருகே, மலைப்பாதையில் மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.
கர்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து பொள்ளாச்சி நோக்கி, நேற்று முன்தினம், மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, செம்மணஞ்சேரி நாராயணபுரத்தை சேர்ந்த டிரைவர் செல்வக்குமார், 38; என்பவர் ஓட்டி வந்தார்.
இரவு 12:30 மணிக்கு வரட்டுப்பள்ளம் அருகே, 'வியூ' பாயின்ட் வளைவில் லாரி திரும்பியபோது, பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபக்க சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லேசான காயங்களுடன் தப்பிய டிரைவர் செல்வக்குமார், அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.