/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாங்கிய குழந்தை மீது லாரி ஏறி பலி
/
துாங்கிய குழந்தை மீது லாரி ஏறி பலி
ADDED : அக் 26, 2024 08:09 AM
காங்கேயம்: கரூர் மாவட்டம் கடவூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி அருள்முருகன், 31; அம்சவள்ளி, 25; இவர்-களின், ௧௦ மாத பெண் குழந்தை பவி யாழினி. கணவன், மனைவி ஊர் ஊராக சென்று மரம் வெட்டும் வேலை செய்கின்றனர்.
தற்போது வெள்ளகோவில் அருகே கம்பளியம்பட்டியில், வளையக்காட்டு தோட்டம் பகுதியில், நான்கு நாட்களாக மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்-ளனர். இந்நிலையில் குழந்தையை மர நிழலில் துாங்க வைத்து விட்டு, பணியில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது லோடு ஏற்ற வந்த லாரி, துாங்கி கொண்டிருந்த குழந்தை மீது ஏறியதில், குழந்தை தலை நசுங்கி பலியானது. இது தொடர்பாக குண்-டடத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்ரமணி, 60, மீது, வெள்ளகோவில் போலீசார் வழக்குப்ப-திவு செய்தனர்.