/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலாவதி கட்டடத்தில் இயங்கும் பொருளாதார குற்றப்பிரிவு ஆபீஸ்
/
காலாவதி கட்டடத்தில் இயங்கும் பொருளாதார குற்றப்பிரிவு ஆபீஸ்
காலாவதி கட்டடத்தில் இயங்கும் பொருளாதார குற்றப்பிரிவு ஆபீஸ்
காலாவதி கட்டடத்தில் இயங்கும் பொருளாதார குற்றப்பிரிவு ஆபீஸ்
ADDED : டிச 03, 2024 01:46 AM
காலாவதி கட்டடத்தில் இயங்கும்
பொருளாதார குற்றப்பிரிவு ஆபீஸ்
ஈரோடு, டிச. 2-
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்,
எஸ்.பி., அலுவலகம் அருகேயுள்ள போலீசாரின் அடுக்குமாடி குடியிருப்பு கீழ்தளத்தில், சில ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டி பல ஆண்டுகளாகிறது. இதை முழுமையாக இடித்து அகற்ற, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தினர், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த கட்டடத்தில்தான் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது சுவரில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுகிறது. இதனால் அச்சத்துக்கிடையே போலீசார் பணியாற்றி வருகின்றனர். பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு என புதிதாக கட்டடம் ஒதுக்கப்படவில்லை. வாடகை கட்டடத்தில் இயங்கவும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இடிக்க அறிவுறுத்திய கட்டடத்தில், சிமெண்ட் காரை பெயர்ந்து விழும் நிலையில் பணியாற்றும் போலீசார், என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பில் உள்ளனர்.