ADDED : அக் 28, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான ஈடிசியாவின், 14வது செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கந்தசாமி, முன்னாள் தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக ஸ்வாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜெயக்குமார் பங்கேற்றார். 57வது ஜி.எஸ்.டி., கவுன்சில்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த விரிவான தகவல் வழங்கினார்.
ஈடிசியா வர்த்தக கண்காட்சி சிறப்பாக அமைய பாடுபட்ட அனைவருக்கும், தலைவர் சரவணன் மற்றும் ஈடிசியா தலைவர் கந்தசாமி தலைமையில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது.
வழங்குநரின் தவறுக்கு வாங்குபவர் தண்டிக்கப்படக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
