/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்துக்கு இடையூறு 2 சிலைகளை அகற்ற தீவிரம்
/
போக்குவரத்துக்கு இடையூறு 2 சிலைகளை அகற்ற தீவிரம்
ADDED : நவ 25, 2024 02:19 AM
ஈரோடு: ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானாவில் மேட்டூர் சாலை, எம்.எஸ். சாலை, நசியனுார் சாலை, ஈ.வி.என்.சாலை, பெருந்துறை சாலைகள் சந்திக்கின்றன. இதில் ஈ.வி.என்.சாலையில் இருந்து பெருந்துறை சாலைக்கு இடதுபுறமாக திரும்பும் இடத்திலும், எம்.எஸ்.சாலையில் இருந்து பெருந்துறை சாலைக்கு செல்லும் இடத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர்,
ஈ.வி.கே.சம்பத் சிலைகள் உள்ளன. இரு சிலைகளும் போக்குவ-ரத்துக்கு இடையூறாக, கனரக வாகனங்கள் மோதி சிலைக்கு சேதம் ஏற்படும் நிலையில் உள்ளன. எனவே சிலைகளை அகற்றி வேறிடத்தில் வைக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள், சங்-கங்கள் சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது.
இதன்படி நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து மாவட்ட நிர்-வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மாவட்ட அலுவலர்-களும் சிலை அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்து, ஆய்வ-றிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது: அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு காத்திருக்-கிறோம். இவ்விரு சிலைகளையும் வைத்த குழுவினரிடம் பேச்சு-வார்த்தை நடத்துவோம். பின் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். இதற்கான நடவ-டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளிடமும் இதுகுறித்து விளக்கியுள்ளோம். இவ்வாறு கூறினர்.