ADDED : மார் 29, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: -சென்னிமலையை அடுத்த மணிமலையை சேர்ந்தவர் சுப்பிரம-ணியன். தனியார் பொறியியல் கல்லுாரி ஆய்வு உதவியாளர். இவரது தந்தை துரைசாமி, 80; சென்னிமலை அருகில் நாமக்கல்-பாளையம், மின்னக்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த, 20ம் தேதி மாலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றி துரைசாமி தீக்குளித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.