ADDED : ஜூலை 12, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே பழனிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், 77; நேற்று காலை, 6:00 மணிக்கு வீட்டு முன்புள்ள அறைக்கு சென்று மின் மோட்டரை இயக்கினார்.
அப்போது மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் பாய்ந்து ஈஸ்வரன் துாக்கி வீசப்பட்டார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் மகன் நரேந்திர சூர்யா புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
