/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டு கொட்டகை சுவர் இடிந்து மூதாட்டி பலி
/
ஆட்டு கொட்டகை சுவர் இடிந்து மூதாட்டி பலி
ADDED : நவ 04, 2025 01:55 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி ஒட்டவலசை சேர்ந்த சிதம்பரம் மனைவி முத்தம்மாள், 60; இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.
முத்தம்மாள் ஆடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். வீட்டை ஒட்டியவாறு மண் சுவருடன்  கூடிய சீமை ஓடு வேய்ந்த ஆட்டு கொட்டகை உள்ளது. கணவர் சிதம்பரம் நான்கு  நாட்களுக்கு முன், ஈங்கூர் சிப்காட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். முத்தம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று மாலை ஆட்டு கொட்டகை  சுவர் இடிந்து விழுந்து கிடக்க, அதன் இடிபாடுகளில் சிக்கி முத்தம்மாள் இறந்து கிடந்தார். சென்னிமலை போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் ஆட்டு கொட்டகை சுவர் விரிசல் விட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனர்.

