/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்சார சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்
/
மின்சார சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்
ADDED : டிச 11, 2025 06:16 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை உட்பட, 20க்கும் மேற்-பட்ட இடங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விதை, மின்சார சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் விவ-சாயிகள் ஈடுபட்டனர்.
விளை பொருட்களுக்கு, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் போராடு-கின்றனர். ஆனால் சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில், ஆஸ்திரே-லியா உட்பட பல நாடுகளில் இருந்து பால், பால் பொருட்கள், விளை பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றனர்.பல விதை சட்டங்கள் இந்தியாவில் இருந்தும், புதிய விதை மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன்படி விதைகள் அனைத்தும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள் வசம் சென்றுவிடும். அதுபோல, மின் உற்பத்தியை தனியாருக்கு வழங்-கும்போது, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு இல-வச மின் யூனிட் உட்பட பல சலுகைகள் பறிபோகும். மின் கட்-டணம் பன்மடங்கு உயரும். 44 தொழிலாளர் சட்டங்களை, 4 தொகுப்பாக மாற்றி, தொழிலாளர்களுக்கு எதிரான நிலைப்-பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது எனக்கூறி, ஐக்கிய விவசா-யிகள் முன்னணி சார்பில் நேற்று விதை, மின்சார சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் அறிவித்தனர்.
பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்டில் தாலுகா பொருளாளர் குப்புசாமி தலைமையில், ஒருங்கிணைப்பாளர் முனுசாமி முன்னி-லையில் நகலை எரித்தனர்.
அதுபோல கோபி, கவுந்தப்பாடி, சத்தியமங்கலம் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் நகல் எரிப்பில்

