ADDED : ஏப் 27, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அத்தாணி காலனி அருகே மாதேஸ்வரன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் குழந்தையப்பன், 70; விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், அத்தாணி காலனி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. நேற்று மாலை சேட்டுக்காட்டுப்புதுாரில் உள்ள சொசைட்டிக்கு பால் ஊற்ற, குழந்தையப்பன் சைக்கிளில் சென்றார்.
திரும்பி வந்தபோது வனப் குதியில் இருந்து வெளியேறிய பெண் யானை நேருக்கு நேர் ஆவேசமாக வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையப்பனை துாக்கி வீசியதில், அருகிலுள்ள வாழை தோட்டத்துக்குள் விழுந்தார். இதில் முழங்காலில் காயத்துடன் தப்பினார். அப்பகுதியில் இரவில் மக்கள் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி, ரோந்து பணியில்
ஈடுபட்டனர்.

