/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தார்ச்சாலை வசதி கேட்கும் எல்லீஸ்பேட்டை மக்கள்
/
தார்ச்சாலை வசதி கேட்கும் எல்லீஸ்பேட்டை மக்கள்
ADDED : மார் 11, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கவுந்தப்பாடி அருகேயுள்ள எல்லீஸ்பேட்டை, அண்ணா காலனியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில், 50 குடும்பத்தினர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.
கடந்த, 1989ல் வருவாய் துறை மூலம் நிலவரி பட்டா வழங்கப்பட்டது. ஆனால், எங்கள் பகுதிக்கு தார்ச்சாலை அமைக்கவில்லை. இதற்கான நிலம் வழங்கியும் சாலை அமைக்க முன்வரவில்லை. குழந்தைகள், முதியோர் நடந்தும், வாகனங்களில் செல்லவும் சிரமப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கே சிரமமாக உள்ளது. எனவே தார்ச்சாலை அமைத்துதர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.