/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.74 லட்சம் கையாடல் நிறுவன ஊழியர் கைது
/
ரூ.1.74 லட்சம் கையாடல் நிறுவன ஊழியர் கைது
ADDED : ஜூலை 26, 2024 02:50 AM
ஈரோடு: திண்டல், யு.ஆர்.சி.நகரை சேர்ந்தவர் சதாசிவம். அதே பகுதியில் மோட்டார் வாகன ஆயில் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். பல்வேறு பகுதி வியாபாரிகளிடம் ஆர்டர் பெற்று ஆயில் வழங்கி, அதற்கான தொகையை மாதந்தோறும் தவணை முறையில் பெறுவது வழக்கம்.
ஈரோடு, தண்ணீர்பந்தல்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தீபக், விற்பனை மற்றும் பணம் வசூலிக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார். வாடிக்கையாளர்களிடம் வசூலித்து நிறுவனத்துக்கு கொடுத்த கணக்கில் வித்தியாசம் இருந்ததால், வசூல் கணக்கை நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். இதில், 1.74 லட்சம் ரூபாயை, கையாடல் செய்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தரப்பட்டது. இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீபக்கை கைது செய்தனர்.