/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாஸ்ட் புட் கடையில் கிழிந்தது ஊழியர் காது
/
பாஸ்ட் புட் கடையில் கிழிந்தது ஊழியர் காது
ADDED : மார் 05, 2025 06:15 AM
அந்தியூர்: அத்தாணியை சேர்ந்தவர் ஹரிஹர சுதன், 33; பெருமாபாளையத்தில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்யா. ஓராண்டுக்கு முன் சத்யாவுக்கு கணபதிபாளையத்தை சேர்ந்த லோகுவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு ஓடினர்.
கோபி போலீசார் சத்யாவை மீட்டு, கணவருடன் சேர்த்து வைத்தனர். நேற்று முன்தினம் கணபதிபாளையத்தை சேர்ந்த அபிஷேக், பிரதீப்ராஜ், 20, பிரகலநாதன், 22, ஆகியோர், ஹரிஹரசுதன் பாஸ்ட்புட் கடைக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அபிஷேக் கத்தியால் வெட்ட முயன்றபோது ஹரிஹரசுதன் விலகி செல்ல, கடை ஊழியர் அருள்குமாரின் காதில் பட்டு கிழித்தது. அப்பகுதியினர் மூவரையும் பிடித்து ஆப்பக்கூடல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மூவரையும் கைது செய்தனர்.