ADDED : நவ 10, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிறுவன அலுவலக செய்திக்-குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 102 ல் சுகாதார ஆலோசனை அதிகாரியாக பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் வரும், 11ம் தேதி மதியம், 2:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, கலெக்டர் அலுவலகம், பழைய கட்டடம், 2ம் தளத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., முடித்தி-ருக்க வேண்டும். 19 முதல், 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாதம், 18,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். கூடுதல் தகவ-லுக்கு, 73977 24813, 73388 94971, 89259 41108 என்ற எண்-களில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்-ளனர்.