ADDED : ஜூலை 12, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பு.புளியம்பட்டி :பவானிசாகர்-பண்ணாரி சாலையில் உள்ள புங்கார் காலனி பகுதியில் சாலையோரம், 100 மீட்டர் துாரத்துக்கு வடிகால் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி சாலையோரம் வீடு மற்றும் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.