/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி குடிநீர் கேட்டு ஈங்கூர் மக்கள் மறியல் நிலத்தடி நீர் கெட்டுப்போனதாக குமுறல்

ADDED : ஆக 06, 2025 12:53 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன் ஈங்கூர் பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சிப்காட்டை ஒட்டியுள்ளதால் மக்கள் நெருக்கம் அதிகம். இந்த பகுதிக்கு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னிமலை நகருக்கு வரும், காவிரி குடிநீர் குழாயில் பைப் அமைத்து, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படுகிறது.
ஒரு மாதமாக சரியாக குடிநீர் வழங்காமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறதாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் தீர்வு காணவில்லை.
இந்நிலையில் ஈங்கூர் நால்ரோடு பகுதியில், நேற்று காலை திரண்ட மக்கள், சென்னிமலை-பெருந்துறை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் ஆகியோர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
'எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. சிப்காட் சாய ஆலை கழிவுநீரால் நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. தற்போது காவிரி குடிநீரும் வழங்கவில்லையேல் சாவதை தவிர வேறு வழியில்லை' என்று குமுறலை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். தினமும் காலை, 6:௦௦ மணி முதல் பகல் 12:௦௦ மணிவரை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அவர்கள் உறுதி கூறவே, மறியலை கைவிட்டனர்.
மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.