sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு எம்.எல்.ஏ., இளங்கோவன் மரணம்: தொகுதி அலுவலக சென்டிமென்ட் காரணம்?

/

ஈரோடு எம்.எல்.ஏ., இளங்கோவன் மரணம்: தொகுதி அலுவலக சென்டிமென்ட் காரணம்?

ஈரோடு எம்.எல்.ஏ., இளங்கோவன் மரணம்: தொகுதி அலுவலக சென்டிமென்ட் காரணம்?

ஈரோடு எம்.எல்.ஏ., இளங்கோவன் மரணம்: தொகுதி அலுவலக சென்டிமென்ட் காரணம்?


ADDED : டிச 15, 2024 03:27 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தொகுதி அலுவலக சென்டிமென்ட்டின்படி, எம்.எல்.ஏ., ஆன-வர்கள் அரசியலில் ஒதுங்குவது, ஓரங்கட்டப்படுவது, இறப்பது தொடர்கிறது. இதை இளங்கோவன் மரணமும் உறுதி செய்துள்ள-தாக, அனைத்து கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த மூத்த அரசியல் பிரமுகர் கூறிய-தாவது:ஈரோடு எம்.எல்.ஏ., பயன்பாட்டுக்காக, எஸ்.கே.சி., சாலையில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது. இங்கு கால் பதித்தவர்கள், பதிக்காதவர்களும் கூட, 'அரசியல் வாழ்வில் அஸ்-தமிக்கும்' நிலை ஏற்படும் சென்டிமென்ட் தொடர்கிறது.

ஒருங்கிணைந்த ஈரோடு சட்டசபை தொகுதியாக இருந்த போது, 1996ல் எம்.எல்.ஏ.,வாக இருந்த தி.மு.க.,வின் என்.கே.கே.பெரி-யசாமி, இந்த அலுவலகத்தை பயன்படுத்தினார். 2001ல் தோற்றார். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க.,வில் முக்-கிய சக்தியாக இருந்தவர், அதன்பின் அரசியலில் இருந்து ஒதுங்-கினார்.கடந்த, 2001ல் எம்.எல்.ஏ.,வான அ.தி.மு.க., தென்னரசு, அதன்பின் போட்டியிட வாய்ப்பின்றி, ஓரங்கட்டப்பட்டார். மீண்டும், 2016ல் தென்னரசு எம்.எல்.ஏ.,வானாலும், இடைப்-பட்ட காலத்தில் கடும் உடல் நலக்குறைவால் பாதித்தார். இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, காளிங்கராயன் விடுதியில் அறை எடுத்து, அலுவலகமாக செயல்படுத்தினார்.கடந்த, 2006ல் தி.மு.க.,வில் வென்ற என்.கே.கே.பி.ராஜா, கைத்தறி துறை அமைச்சரானார். இந்த அலுவலகத்தை பயன்படுத்திய நிலையில், நில அபகரிப்பு குற்றச்சாட்டால் அமைச்சர் பதவியை இழந்தார். பின் பல்வேறு காரணத்தால் கட்சி, அரசியலில் இருந்தும் ஒதுங்-கினார்.

இதற்கிடையில், ஈரோடு தொகுதி கிழக்கு - மேற்கு என இரண்-டாக பிரிக்கப்பட்டது.ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேர்-தலில் தே.மு.தி.க.,வின் சந்திரகுமார் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். சட்டசபையில் ஜெ.,யுடன் மோதிக் கொண்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது அலுவலகத்துக்கும் 'சீல்' வைத்தனர். ஒன்றரை ஆண்டு மட்டுமே எம்.எல்.ஏ.,வாக செயல்-பட முடிந்ததுடன், தே.மு.தி.க.,வில் இருந்து வெளியேறி, தி.மு.க.,வில் இணைந்தார்.

அதே தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோற்றுப்-போனார். அடுத்து, 2021ல் காங்., எம்.எல்.ஏ.,வான திருமகன் ஈவேரா, இந்த அலுவலகத்தை புனரமைத்து செயல்படுத்த முயன்றார். ஏனோ அம்முயற்சியை கைவிட்டு, மாநகராட்சி பிர-தான அலுவலக கட்டடத்தில் ஒரு அறையை பெற்று அலுவலக-மாக்கி செயல்பட்டார். இருந்தும், 2023 ஜன., 4ல் உடல் நலக்கு-றைவால் இறந்தார். அப்போதும் இந்த அலுவலக சென்டிமென்ட் பூதாகரமானது.

பின், 2023 பிப்., 27ல் இடைத்தேர்தலில் வென்ற அவரது தந்தை இளங்கோவன், உடல் நலக்குறைவு, மகன் இறப்பின் சோகம், குடும்ப பிரச்னைகளால் தளர்ந்து காணப்பட்டு, நேற்று இறந்தார். இவரும் கூட, அந்த அலுவலகம் செல்லாமல், தனது வீட்டையே அலுவலகமாக பயன்படுத்திய போதிலும், இந்த சோகம் நிகழ்ந்-ததால், மீண்டும் சென்டிமென்ட் சர்ச்சை எழுந்துள்ளது. 'மூடநம்-பிக்கை' என ஒரு பக்கம் புறந்தள்ளினாலும், தொடரும் அசம்பா-வித நிகழ்வுகள் 'ஏதோ ஒன்றை' உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us