/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி பஸ் ஸ்டாண்டில்இருள் சூழ்ந்தகழிப்பிடம்
/
கோபி பஸ் ஸ்டாண்டில்இருள் சூழ்ந்தகழிப்பிடம்
ADDED : ஆக 01, 2011 02:48 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச கழிப்பிடத்தில் பல
வாரங்களாக மின் விளக்கு எரியாததால், இரவில் கழிப்பிடத்துக்கு செல்லும்
பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கோபியை சுற்றி புகழ்பெற்ற கோவில்கல், சுற்றுலா தலங்கள், பள்ளி, கல்லூரிகள்
உள்ளன. ஈரோடு - மைசூரு ரோட்டில் மையப்பகுதியாக உள்ள கோபி பஸ் ஸ்டாண்டில்,
காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும்.இங்குள்ள
இலவச கழிப்பிடத்தில், இரு மாதமாக 'டியூப் லைட்' எரியவில்லை. இலவச
கழிப்பிடம் இருளில் தவிக்கிறது.இரவு நேரத்தில் கழிப்பிடத்துக்கு செல்லும்
பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் இருட்டில் பயந்து நடுங்கியபடியே சென்று
வருகின்றனர். கழிப்பிடத்தை சரியாக பராமரிக்காமல், சுகாதாரமற்ற நிலையில்
உள்ளது.பொதுமக்கள் அனைவரும் கட்டண கழிப்பிடத்துக்கு செல்ல வேண்டும் என்ற
நோக்கத்தில் சென்ற இரு மாதமாக 'டியூப் லைட்' போடாமல் நகராட்சி நிர்வாகம்
காலம் தாழ்த்தி வருகிறது.