/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடும்ப சண்டையால் தூக்கம் தொலைத்த மக்கள் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் மனு
/
குடும்ப சண்டையால் தூக்கம் தொலைத்த மக்கள் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் மனு
குடும்ப சண்டையால் தூக்கம் தொலைத்த மக்கள் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் மனு
குடும்ப சண்டையால் தூக்கம் தொலைத்த மக்கள் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் மனு
ADDED : ஆக 01, 2011 02:49 AM
ஈரோடு: ஈரோடு ஓடைப்பள்ளம் பகுதியில், தெருவுக்கு வந்த குடும்ப சண்டையால்
தூக்கத்தை பறிகொடுத்து வருகிறோம் என்றும், இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் மனு கொடுத்தனர்.ஈரோடு,
ஓடைபள்ளம் அசோகபுரி குடிசை பகுதியை சேர்ந்தவர் கோபால்(25). புரோட்டா
மாஸ்டர். இவருக்கு ஏற்கனவே சம்பூரணம் (35) என்ற முதல் மனைவி உள்ளார். இவர்
கொல்லம்பாளையத்தை சேர்ந்த கோமதி(20) என்ற பெண்ணை இரண்டாவது திருமணம்
செய்தார். கோமதிக்கு இனியவன் என்ற ஒன்றரை மாத பெண் குழந்தை உள்ளது. கோபால்
தினமும் கோமதி மற்றும் அவரது குழந்தையை அடித்துள்ளார். இவர்களது குடும்ப
சண்டை அசோகபுரி குடிசை பகுதியை சேர்ந்தவர்களுக்கு பெரும் தலைவலியாக
இருந்தது. தினமும் அடித்து சித்ரவதைபடும் கோமதிக்கு உரிய நியாயம் கிடைக்க
வேண்டி அப்பகுதியினர் ஈரோடு டவுன் ஸ்டேஷன், மகளிர் ஸ்டேஷனில் புகார்
செய்தனர்.அசோகபுரி மக்கள் மனுவில் கூறியதாவது:மேற்கண்ட பிரச்னையால் கோமதியை
தினமும் கோபால் அடித்து, உதைக்கிறார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் தன்
குழந்தையின் கழுத்தை பிடித்து நெறித்து, கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கண்டித்தபோது எங்களை தகாத வார்த்தையால்
திட்டினார். நேற்று முன்தினம் இருவரும் சண்டை போட்டனர். வலி தாங்க முடியாத
கோமதி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்ய சென்றார். போலீஸார்
நேரில் வந்து எங்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பின் கோபால் எங்களை தகாத
வார்த்தையில் திட்டினார்.கோபால் தன்னுடைய வீட்டில் அதிக சப்தத்துடன்
டி.வி.,யை ஆன் செய்து கொண்டு தொந்தரவு செய்கிறார். அன்றாடம் வேலைக்கு
சென்று திரும்பும் நாங்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. ஆகவே
கோபால் மனைவி கோமதிக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நல்தொரு தீர்வு கிடைக்க
வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்கள்.