ADDED : செப் 24, 2011 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதி சிக்கஹள்ளி வனப்பகுதியில் நேற்று காலை
வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.
அப்போது, யானை ஒன்று விழுந்து கிடந்ததை
பார்த்தனர்.மண்டலவன அதிகாரி அருண், மாவட்ட வன அதிகாரி சதிஷ், கால்நடை
டாக்டர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். 20 வயது மதிக்கத்தக்க
பெண் யானை, நோய் தாக்கி, நடக்க முடியாமல் கிடந்தது. அதனருகே குட்டியானை
நின்று கொண்டிருந்தது. குட்டியானையை விரட்டி விட்டு, தாய் யானைக்கு
சிகிச்சை துவங்கியது. எனினும், சற்று தூரத்தில் நின்றபடி குட்டியானை
பார்த்துக் கொண்டிருந்தது. நேற்று மாலையில் மற்ற யானைகள் நெருங்கி வர
ஆரம்பித்ததால், வனத்துறையினர் அங்கிருந்து அகன்றனர்.