/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய கராத்தே போட்டியில் ஈரோடு மாணவிக்கு தங்கம்
/
தேசிய கராத்தே போட்டியில் ஈரோடு மாணவிக்கு தங்கம்
ADDED : டிச 20, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் இந்திய பள்ளிகள் விளையாட்டு அமைப்பு சார்பில், 68வது தேசிய பள்ளி விளையாட்டில், கராத்தே போட்டி நடந்தது. இதில் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி விசாலாட்சி, ௧௩, பங்கேற்றார். இவர், 38 கிலோ எடை பிரிவில் குமித்தே பிரிவில் தங்கம் வென்றார்.
தங்கம் வென்று ஈரோடு வந்த மாணவிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், சாஸ்திரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.