/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உலக சிலம்பம் போட்டி ஈரோட்டுக்கு 19 பதக்கம்
/
உலக சிலம்பம் போட்டி ஈரோட்டுக்கு 19 பதக்கம்
ADDED : அக் 07, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கத்தார் நாட்டில், உலக அளவிலான ஓபன் சிலம்பம் போட்டி நடந்தது. இதில் இந்தியா, சவுதி அரேபியா, கத்தார், ஓமன், மலேசியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் ஈரோடு கலைத்தாய் அறக்கட்டளையின் ஆறு மாணவர், நான்கு மாணவியர் பங்கேற்றனர். இவர்கள் ஆறு தங்கம், ஏழு வெள்ளி, ஆறு வெண்கலம் என, 19 பதக்கம் வென்றனர். ரயிலில் ஈரோட்டுக்கு நேற்றிரவு வந்தவர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.