/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியம்பட்டி சந்தைக்கு சரிந்த மாடுகள் வரத்து
/
புளியம்பட்டி சந்தைக்கு சரிந்த மாடுகள் வரத்து
ADDED : நவ 22, 2024 01:19 AM
புளியம்பட்டி சந்தைக்கு
சரிந்த மாடுகள் வரத்து
புன்செய் புளியம்பட்டி, நவ. 22-
புன்செய்புளியம்பட்டி நகராட்சி கால்நடை சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. நேற்று நடந்த சந்தைக்கு, கடந்த வாரத்தை விட கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குறைந்த அளவில் விற்பனைக்கு வந்தன. அதேசமயம் கன்றுகள் அதிகம் கொண்டு வரப்பட்டன. 10 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 150 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், கறவை மாடுகள், 80 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 12 கிலோ வரையிலான வெள்ளாடு, 8,000 ரூபாய் வரை, 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடு, 6,500 ரூபாய் வரை விலை போனது.
* ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள்; 20,000 ரூபாய் முதல், 68,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; 24,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், 70 சதவீத மாடுகள் விற்பனையாகின.