/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஞ்சர் மீது நடவடிக்கை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
ரேஞ்சர் மீது நடவடிக்கை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 03, 2025 01:29 AM
பவானிசாகரை அடுத்த வெள்ளாளபாளையத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம், 50; பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள மாசி கருவண்ணராயர் கோவிலுக்கு காரில் சென்று விட்டு திரும்பினார். காராச்சிக்கொரை வன சோதனை சாவடியில், வனத்துறை ஊழியர்கள் மற்றும் ரேஞ்சர் சதாம் உசேன் தன்னை தாக்கியதாக, பவானிசாகர் போலீசில் புகாரளித்திருந்தார். மாணிக்கம் மீது வனத்துறையினரும் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக இருதரப்பினர் மீதும் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ரேஞ்சர் சதாம்உசேன், வனத்துறை ஊழியர்களை கைது செய்யக்கோரியும், விவசாயி மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் முன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் பங்கேற்றனர்.