ADDED : மே 18, 2024 01:07 AM
மாநகரில் விளம்பர
பேனர்களை அகற்ற குழு
ஈரோடு: மும்பையில் வீசிய புழுதி புயலில், 120 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில், 16 பேர் பலியாகியுள்ளனர். இதன் எதிரொலியாக, ஈரோடு மாநகராட்சியில் விளம்பர பேனர்களை அகற்ற மண்டல வாரியாக குழு அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இக்குழுவின் மூலம், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பேனர்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் அகற்றும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை ஏலம்புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நடந்தது. புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள், நிலக்கடலை கொண்டு வந்தனர். மொத்தம் 45 கிலோ எடையில், 163 மூட்டை வரத்தானது. இதில் நிலக்கடலை (காய்ந்தது) முதல் தரம், 70 ரூபாய் முதல், 73 ரூபாய்; இரண்டாம் ரகம், 65.80 ரூபாய் முதல், 69 ரூபாய் வரையும் ஏலம் போனது. 4.34 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

